Friday, July 20, 2007

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பெரிது படுத்துவது நம்பகத்தன்மையை பாதிக்காதா

ஒரு இணைய தளமோ, பத்திரிகையோ, டி.வி.யோ ஆதாரப்பூர்வ, தரமான செய்திகளை வெளியிட்டால் மட்டுமே வாசகர் மத்தியில் நிலைத்து நிற்க இயலும். யாரோ ஒருவர் குற்றம் சாட்டினார் என்பதற்காக சக பத்திரிகையாளர் தொடர்பாக இப்படி வரிந்து கட்டிக் கொண்டு செய்திகள் வெளியிடுவது எந்த அளவுக்கு நியாயம்? உங்களுடைய வாசகர்கள் இதை பற்றி என்ன நினைப்பார்கள்? உங்களுடைய நம்பகத்தன்மை பற்றி அவர்களுக்கு சந்தேகம் வராதா? ஒரு பத்திரிகையின் வாசகர்களை உங்கள் பக்கம் இழுக்க விரும்பினால் அந்த பத்திரிகைக்கு சமமான அல்லது அதை விடச் சிறந்த செய்திகளை வெளியிடுவதுதானே பத்திரிகை தர்மம். அதை விட்டு விட்டு இப்படி அவதூறு செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் உங்களுக்கு என்ன லாபம்? அந்த பத்திரிகையின் வாசகர்களை இத்தகைய செய்திகள் மூலம் உங்களிடம் இழுத்துக் கொள்ள முடியுமா? இத்தகைய செய்திகளை வெளியிடுவனதன் மூலம் உங்கள் வாசகர்களின் மதிப்பை நீங்கள் இழப்பதுதான் முடிந்த முடிவாக இருக்கும்.

2 comments:

PRINCENRSAMA said...

பத்திரிகையாளன் தவறு செய்தால் அதை எழுதக்கூடாது என்பது தான் பத்திரிகா தர்மமா?

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

ஒருவன் செய்த தவறுக்கு வக்காலத்து வாங்குவதற்காக ஒரு பிளாக் ஓபன் பண்ணுவது தான் நாட்டு நடப்பா? இந்த பிளாக்கில் பேசுவதற்கு வேறு நாட்டு நடப்பு எதுவுமே இல்லயா?

அனானி அந்துமணிக்காக இன்னொரு அனானிகள் பிளாக் ஓபன் பண்ணுவது இன்டெர்னெட்டின் கெட்ட வாய்ப்பு.