Friday, July 20, 2007

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பெரிது படுத்துவது நம்பகத்தன்மையை பாதிக்காதா

ஒரு இணைய தளமோ, பத்திரிகையோ, டி.வி.யோ ஆதாரப்பூர்வ, தரமான செய்திகளை வெளியிட்டால் மட்டுமே வாசகர் மத்தியில் நிலைத்து நிற்க இயலும். யாரோ ஒருவர் குற்றம் சாட்டினார் என்பதற்காக சக பத்திரிகையாளர் தொடர்பாக இப்படி வரிந்து கட்டிக் கொண்டு செய்திகள் வெளியிடுவது எந்த அளவுக்கு நியாயம்? உங்களுடைய வாசகர்கள் இதை பற்றி என்ன நினைப்பார்கள்? உங்களுடைய நம்பகத்தன்மை பற்றி அவர்களுக்கு சந்தேகம் வராதா? ஒரு பத்திரிகையின் வாசகர்களை உங்கள் பக்கம் இழுக்க விரும்பினால் அந்த பத்திரிகைக்கு சமமான அல்லது அதை விடச் சிறந்த செய்திகளை வெளியிடுவதுதானே பத்திரிகை தர்மம். அதை விட்டு விட்டு இப்படி அவதூறு செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் உங்களுக்கு என்ன லாபம்? அந்த பத்திரிகையின் வாசகர்களை இத்தகைய செய்திகள் மூலம் உங்களிடம் இழுத்துக் கொள்ள முடியுமா? இத்தகைய செய்திகளை வெளியிடுவனதன் மூலம் உங்கள் வாசகர்களின் மதிப்பை நீங்கள் இழப்பதுதான் முடிந்த முடிவாக இருக்கும்.

நல்லவரை அவதூறு செய்கிறார்கள்

பழம்பெரும் எழுத்தாளர் பஞ்சாபகேசன் அவர்கள் தேவையில்லாமல் ஒரு நல்லவரை அவதூறு செய்கிறார்கள் என பழம்பெரும் எழுத்தாளர் பஞ்சாபகேசன் அவர்கள் இந்த நிகழ்ச்சி பற்றிப் பேசும்போது கூறினார்.

"சொந்தச் செலவில் சூனியம்"

பத்திரிகையாளர்கள் தங்கள் சகப்போட்டியாளர்களை இதுபோல சந்தி சிரிக்க வைப்பதென்பது "சொந்தச் செலவில் சூனியம்" வைத்துக் கொள்வதைப் போன்றதே. பத்திரிகையாளர்களுக்கு என்று மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரை அவர்களாகவே கெடுத்துக் கொள்ளும் மோசமான சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது.

Thursday, July 19, 2007

ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி

தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டு கழகங்களுக்கும் தமிழக மக்கள் முதலில் டாடா சொல்லணும். அப்போ தான் தமிழகம் உருப்படும். அந்த விழிப்புணர்வு வரணும். கருணாநிதி, ஜெயலலிதா இரண்டு பேருக்குமே, காவிரி, முல்லை பெரியாறு நதிப் பிரச்னைகளை சரியாக கையாள முதுகெலும்பு இல்லை. இவர்கள் வீணாக வீராப்பு பேசுகின்றனர். அது என்ன மோ, தமிழகத்தில் சினிமா டயலாக் பேசியே காலத்தை ஓட்டுகின்றனர்